Vajram Sports Development Federation Tamil Nadu (VSTF) was established by Master Kamaraj and the Federation offers the Best Silambam Classes and Valari classes in Erode, Tamil Nadu.
தற்காப்பு கலையை விரும்பும் அனைவருக்கும் வணக்கம்
நாங்கள் வஜ்ரம் சிலம்பாட்ட குழு என்னும் பெயரில் தற்காப்பு கலைகளை இலவசமாக ஏழை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஒரு பயிற்சிக் கூடம் அமைத்து 15 வருடமாக சிலம்பம் வாள் வீச்சு மான்கொம்பு சுருள்வாள் உள்ளிட்ட பல தற்காப்பு கலைகளை திறம்பட அவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறோம்
மேலும் வளரி ஊது கொல்லி போன்ற அழிவின் விளிம்பில் உள்ள கலைகளையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறோம்
எங்களிடம் ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் வயது வித்தியாசமின்றி அனைவரும் தற்காப்பு கலைகளை கற்று வருகிறார்கள்
மேலும் மிகவும் அரிய கலையான வளரி கலையை வெளிநாட்டில் உள்ளவர்களும் இங்கு வந்து கற்றுக் கொள்கிறார்கள் வளரியை நாங்களே தயார் செய்து அதை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்
தற்காப்பு கலை கற்ற அனைவருக்கும் கற்றுக் கொடுக்கவும் பள்ளி விளையாட்டுகள் உள்பட அனைத்து விளையாட்டுகளையும் கற்றுக்கொடுக்கவும் விளையாட்டு போட்டி நடத்தவும் நாங்கள் வஜ்ரம் ஸ்போட்ஸ் டெவலப்மன்ட் பெடரேஷன் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் அனைத்து விளையாட்டுகளையும் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கவும் சிறப்பாக கற்று கொண்ட மாணவர்களை கொண்டு விளையாட்டுபோட்டி நடத்தி அவர்களை வெற்றி பெற வைத்து உலக அளவில் நடக்கக்கூடிய அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் சாதனைகள் படைக்க மாணவர்களை தயார் செய்வதே எங்கள் குழுவின் நோக்கம்
எங்களிடம் தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்ட மாணவ மாணவிகள் பல மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்கள்
எங்கள் குழுவில் அரசு அதிகாரிகள் டாக்டர்கள் வக்கீல்கள் ஆசிரியர்கள் உடற்பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள பலரும் இந்த கலையை கற்று மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வருகிறார்கள் மேலும் நமது வஜ்ரம் சிலம்பாட்ட குழுவின் சாதனைகள் மற்றும் பயிற்சிகளை அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பி உள்ளார்கள் அனைத்து செய்தித்தாள்களிலும் செய்திகளாக வெளிவந்துள்ளது
Register under:- Tamil Nadu Societies Registration Act,1975 (Tamil Nadu Act 27 of 1975).
SI. No. SRG/Erode/15/2022
MSME Reg. No: UDYAM-TN-07-0031684